பெங்களூரூ:
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப்போவதாக தெரிவித்துள்ளதால் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும் கிடைத்தன. இரு கட்சிகளும் கூட்டணி
அமைத்து குமாரசாமி முதலமைச்சரானார். இந்நிலையில் பதவி பறிக்கப் பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிஞ்சோலி தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனிடையே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிகோளி, சுதாகர் ஆகியோர் பாஜக மூத்த தலைவரான எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது காங்கிரசில் இருந்து மேலும் 10 அதிருப்திஎம்எல்ஏக்கள் பாஜகவுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறியதாக தகவல் வெளியானது. இதனால் கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.