tamilnadu

img

போச்சோ வழக்கில் லஞ்சம் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்

போச்சோ வழக்கில் லஞ்சம் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்'

கடலூர், ஏப்.25- போக்சோ வழக்கில் லஞ்சம் பெற்ற விருத்தாசலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்.பி.ஜெயக்குமார் உத்தர விட்டுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சித்தப்பா தனவேல் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளான். இது குறித்து சிறுமி விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய லட்சுமி, சிறுவன் மற்றும் சிறுமி யின் சித்தப்பா தனவேல், அவரது தாயார் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி அல்லாத வர்களை விடுவிப்பதற்கு மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, தலைமை காவலர் சிவசக்தி ஆகியோர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதன் மீது விசாரணை மேற்கொண்டு லஞ்சம் பெற்ற காவல்துறையினர் இரண்டு பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.