tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

வணிக சிலிண்டர் விலையில்  ரூ.25 குறைப்பு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமை யல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.25 குறைந் துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1906-இல் இருந்து ரூ.1881  ஆக குறைந்தது. வீட்டு  உபயோக பயன்பாட்டுக் கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

வினாத்தாள் கசிவு: 6 பிரிவில் வழக்கு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழ கத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106  கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. தற் போது ஏப்ரல் மாத பரு வத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த மே 27 அன்று பி.காம் பட்டப் படிப்புக்கான ‘தொழிற்சாலை சட்டம்’ (இன்டஸ்டிரியல் லா) என்ற பாடத்தின் வினாத் தாள் கசிந்தது. இதை யடுத்து அன்று நடக்க விருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத் தாள் கசிவுக்கு காரண மானவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்கும்  வகையில், 6 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்து பேட்டை போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாகூர் ராஜா நியமனம்

சென்னை: இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவராக எம். நாகூர் ராஜா நியமிக்கப் பட்டுள்ளதாக அக்கட்சி யின் அகில இந்திய கவுன்சில் தேசிய பொ துச் செயலாளர் முஸம் மில் ஹுசைன் தெரிவித் துள்ளார்.