tamilnadu

img

ஊரகத் திறனாய்வு தேர்வு: பேராவூரணி மாணவி முதலிடம்

ஊரகத் திறனாய்வு தேர்வு:  பேராவூரணி மாணவி முதலிடம்

தஞ்சாவூர், ஏப்.25-  தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 25 அன்று ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாண வர்கள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். வருவாய் மாவட்ட அளவில் நூறு மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு  ரூ.12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப் பெறு கிறது. இந்த தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அபிநயா, யாழினி, கலைமதி, பிரசன்யா ஆகி யோர் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை  பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் அபிநயா என்ற மாணவி தஞ்சை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.