குழித்துறை, மே 27- மார்த்தாண்டம் அருகே நட்டாலம் இடவிளாகம் பகுதி யில் தனியார் கல்லூரி வளா கத்தில் இருந்து திறந்து விடப்படும் கழிவுநீர் அப்ப குதியில் உள்ள காஞ்சி ரங்குழி குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்த னர். மார்த்தாண்டம் அருகே நட்டாலம் இடவிளாகம் பகு தியில் தனியார் கல்லூரி குழு மம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவுநீர் போன்ற வை சுகாதாரமற்ற வகையில் திறந்தவெளியில் தேக்கி வைக்கின்றனர். மழை நேரங்களில் இந்த கழிவுநீர் திறந்து விடப்படுவதால் இவை ரோட்டோரம் பாய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. மேலும் ஓடைக ளில் பாய்ந்து செல்லும் இந்த சுகாதரமற்ற கழிவுநீர் உள்ள டக்கிய கழிவுகள் அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக இடவிளாகம் காஞ்சிரங்குழி குளத்தில் இவை பாய்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இங்கு குளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியை சுற்றி ஏராள மான குடியிருப்புகள் இருப்ப தால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உரு வாகி உள்ளது. இதுதொடர்பாக அதி காரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.