உதகை, பிப். 8- உதகை அருகே உள்ள கோடப்பமந்து கால்வா யில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கோடப்பமந்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதுடன் ஏராளமான குப்பைகளும் தேங்கி வருகிறது. இத னால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் உதகை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு போதிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தி இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தக் கால்வாயை பராம ரிப்பதற்கு போதிய அக்கறை செலுத்துவதில்லை என் றும் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.