tamilnadu

img

சேலம் ஆவின் பால் பண்ணை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

சேலம், செப். 24- சேலம் ஆவின் பால் பண்ணையின் கழிவு நீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம்  உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.  சேலம் மாவட்டம், தளவாய்ப்பட்டி பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய் யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் இங்கு நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகளும் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப் படுகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனை தடுக்க அதிகாரிகளால் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இப்பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு கழிவு நீர் குடியி ருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் தாலுகா செயலாளர் சுந்த ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியு றுத்தியுள்ளார்.