districts

ஆட்சியாளர்கள் அலட்சியமே காரைக்கால் சம்பவம்: சிபிஎம் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜூலை.6- புதுச்சேரி ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே காரைக்காலில் வாயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செய லாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரம், கல்லறை தெரு, கிளிஞ்சல் மேடு, கோவில் பத்து ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் நூற்றுக்கணக்கானோர் காலரா, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காரைக்கால் முழுவதும் மக்களிடம்  தற்போது  அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சி  செய்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு தேர்தலின் போது மக்கள் நலத்திட்டங்களை தங்கு தடை யின்றி நிறைவேற்றப்படும் என உறுதி யளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒராண்டு காலம் நிறை வடைந்தும் மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரமான குடி தண்ணீரை கூட வழங்குவதற்கு ஆட்சி யாளர்கள் தயாராக இல்லை என்பதை தான் காரைக்கால் சம்பவம் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப் பட்ட குடிநீர் குழாய்கள் இன்னும் காரைக்கால் பகுதியில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த குழாய்களை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.  ஆனாலும் கண்டுக் கொள்ளாமல் உள்ள ஆட்சியாளர்க ளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சில தினங்க ளுக்கு முன்பு புதுச்சேரி, காரைக் காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. அப்போது அலட்சியம் காட்டியது. தொற்று நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இனியும் காலம் கடத்தா மல், புதிதாக குடிநீர் குழாய்களை அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். காரைக்கால் மட்டுமல்ல, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதியில் பொதுப்பணித் துறையால் விநியோகிக்கப்படும் குடிநீர்  உப்பு கலந்து பழுப்பு  நிறமாக வருகிறது. இதனால் தண்ணீரைக் கூட மக்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.