tamilnadu

img

நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்:
"இந்தியத் திரை ரசிகர்களை தனது நடிப்பால் ஆளுமை செய்த திரைக்கலைஞர் சரோஜா தேவி உடல்நலக் குறைவால் மறைந்தார் என்னும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 
தமிழ் திரைத்துறையில் தனிப்பெரும் ஆளுமையாக வலம் வந்த சரோஜா தேவியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்."
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
"தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான  சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்"