tamilnadu

img

நெல் கொள்முதல் கேரளா-சத்தீஸ்கரை பின்பற்றுக தமிழக அரசுக்கு பி.சண்முகம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், பிப்.13- மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  காஞ்சிபுரத்தில் வியாழனன்று (பிப்.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.சாரங்கன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மோகனன்,செயலாளர் கே.நேரு, துணை செயலாளர் டி.லிங்கநாதன், காஞ்சிபுரம் செயலாளர் இ.லாரன்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் கே.ஜீவா, வாலிபர் சங்க நகரத் தலைவர் இ.சங்கர், எம். வாசு, எம்.ஜோதி, வி.குட்டி, ஏ.தாண்டவரா யன், நிர்வாகிகள் வி.சுகுமார், இ.விநாயகம், எஸ்.கெம்பு, ஜி.ஆனந்தவேல், கே.சம்பத், வி.ஆறு முகம், எல்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.செல்லப்பா, சி.நீலகண்டன், கே.வி. மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் பி.சண்முகம் பேசுகையில்,“ மக்களவையில் 2020 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இது கடந்த காலங்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தான பட்ஜெட்டாகும். விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் எதிரானதாக உள்ளது” என்றார். 100 நாள் வேலை திட்டத்தில் யாருக்கும் 100 நாட்களுக்கு  வேலை தருவதில்லை. அதிகபட்சம் 50 நாட்கள் மட்டுமே வேலை தருகிறார் கள். இந்த முறை பட்ஜெட்டில் நிதி வெகுவாக குறைத்துவிட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில்  ஒரு நாளைக்கு 120 ரூபாய் கூலி என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பஞ்சாயத்துக்களில் பணம் இல்லை என கூறப்பட்டு குறைவாகவே கொடுக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தால் குறைத்து கொடுக்கப் படும்  கூலியும் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை அரசு கொள்முதல் செய்யும் பொழுது,நேரடியாக விவசாயிகளிடம் கொள் முதல் செய்வதில்லை. இடைத்தரகர்கள் மூலம் வியாபாரி களிடம் கொள்முதல் செய்து லாபம் பார்க்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும். கேரளாவில் நெல் கொள்முதல் செய்வதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2630 கொடுக்கிறார்கள். சட்டீஸ்கரில் ரூ.2500 கொடுக்கிறார்கள். எனவே, தமிழக அரசும் இதை பின்பற்றி விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.