tamilnadu

img

ஒரே நாளில் 800 புள்ளிகள் சரிவு மீண்டும் பலத்த அடிவாங்கிய பங்குச் சந்தை!

புதுதில்லி, மார்ச் 6 - கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.  பிப்ரவரி 13 அன்று 41 ஆயிரத்து 709 என்கிற உச்சப் புள்ளியில் மும்பை பங்குச் சந்தை இருந்தது. ஆனால், அதன்பிறகு அது தொடர்ந்து இறங்கு முகத்திற்கு போனது. மும்பை பங்குச் சந்தை கடந்த 14 வர்த்தக நாட்களில் மட்டும் 3 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக சறுக்கியது. வியாழக்கிழமையன்று வர்த்தக முடிவில் 38 ஆயிரத்து 470 என்ற புள்ளிகளில் இருந்தது. இந்நிலையில், வர்த்தக வாரத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமையன்று முற்பகலில் ஒரேயடியாக 1200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்தது. பின்னர் ஏற்றமும் இறக்கமுமாக பயணித்த சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 893 புள்ளிகள் என்ற  சரிவுடன், 37 ஆயிரத்து 576 புள்ளிகளாகநிலைகொண்டது. இதேபோல தேசியப் பங்குச் சந்தையான ‘நிப்டி’யும் சுமார் 300 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாழ னன்று 11 ஆயிரத்து 269 புள்ளிகளில் நிறைவடைந்த நிப்டியின் வர்த்தகம், வெள்ளியன்று காலை 10 ஆயி ரத்து 942 புள்ளிகளுக்கு சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 10 ஆயிரத்து 989 புள்ளிகளில் நிலைபெற்றது. ‘யெஸ் பேங்க்’ வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கூறியது, பங்குச் சந்தையில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.