புதுதில்லி:
கொரோனா வைரஸ் தாக்குதலால், ஒருபுறம் மருத்துவ உலகம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது என்றால், அதைக்காட்டிலும் மோசமான நெருக்கடியை உலகப் பொருளாதாரமும் வணிகமும் எதிர்கொண்டு இருக்கின்றன.இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருமாதமாகவே தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 13 ஆயிரத்து 500 புள்ளிகளை, கடந்த3 வாரங்களில் மட்டும் மும்பை பங்குச் சந்தை இழந்துள்ளது.
அதுபோலவே, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையும், கடந்த30 வருடங்களில் இல்லாத மிக மோசமானசரிவைச் சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் 1987-க்கு பிறகு மிக மோசமான சரிவை அந்நாடு சந்தித்துள்ளது. இந்த சரிவு மேலும் தொடரும்; அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக நிலைகுலைய வாய்ப்புள்ளது என்றுபொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.2008-இல் உலகம் முழுக்க பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, அமெரிக்கா சிலஎமர்ஜென்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. வரிகளை குறைப்பது, வங்கிகளின் அவசர வைப்பு நிதியை பயன்படுத்த அனுமதிதருவது என்று நிறைய எமர்ஜென்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனினும் அவை எதுவும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், 2020 ஜனவரி முதல்மார்ச் வரையான காலாண்டில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ‘ஜீரோ’ ஆகவாய்ப்பிருப்பதாக, உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ‘கோல்ட்மென் சாக்ஸ்’ (Goldman Sachs)கணிப்பு வெளியிட்டுள்ளது.அதுமட்டுமன்றி, 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி சுமார் 5 சதவிகிதம் வரைசரியலாம் என்று கூறியுள்ள ‘கோல்ட்மென்சாக்ஸ்’ நிறுவனம், 2020 காலண்டர் ஆண்டில், அமெரிக்க பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவே 0.4 சதவிகித வளர்ச்சியைத்தான் பெறும் என்றும் அந்நாட்டுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.இதே, ‘கோல்ட் மேன் சாக்ஸ்’ நிறுவனம் இதற்கு முன்பு, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை 2020 காலண்டர் ஆண்டில் 1.2 சதவிகிதம் என்றுகணித்திருந்தது.
இதனிடையே, ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ நிறுவனத்தை விடவும் ஐஎன்ஜி(ING) நிறுவன பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை இன்னும் மோசமாக குறைத்துள்ளனர்.2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் வரை சரியலாம் என்று எச்சரிக்கைசெய்துள்ளனர்.கொரோனா வைரஸால், அமெரிக்க பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சரிவுகள், கடந்த 2008-ஆம் ஆண்டு பொரு
ளாதார நெருக்கடியின் போது சந்தித்த சரிவுகளுக்கு நிகராக இருக்கலாம் எனவும் அமெரிக்காவுக்கு அபாயச் சங்கு ஊதியுள்ளனர்.அமெரிக்காவில் தற்போது 4 ஆயிரத்து 731 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுஇருக்கின்றனர். 93 பேர் உயிரிழந்துள்ளனர்.