இலங்கை பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வரும் நிலையில் அந்நாட்டுப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தால் வேகமாகச் சரிந்து வந்தது. இதனால் 2 வாரமாக இலங்கை பங்குச்சந்தை மூடப்பட்டு இருந்தது. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை வெளியேற்ற முடியாமல் இருந்தது.
2 வாரத்திற்குப் பின்பு இலங்கை பங்குச்சந்தை இன்று துவங்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறினர். இதனால் 13 சதவிகித சரிவை எதிர்கொண்டது. பின் அரசின் உத்தரவு பெயரில் முடக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் 2வது முறையாக மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை பங்குச்சந்தையும், இலங்கை நாணயத்தின் மொத்த மதிப்பும் சுமார் 40 சதவிகிதம் சரிந்து உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு நிமிடத்தில் 7 சதவிகித சரிவை பதிவு செய்தது. அதன் பின்பு அடுத்த 30 நிமிடத்தில் கூடுதலாக 5 சதவிகிதம் சரிந்து ஆட்டோமேட்டிங் முறையில் வர்த்தம் செய்வது நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.