கணினி கல்வி நிறுவன அதிபரிடம் ‘செபி’ அமைப்பு விசாரணை
புதுதில்லி,ஜன.28- பங்குச் சந்தை வர்த்தகத்தில், குடும்ப லாபத்திற்காக முறை கேடுகளில் ஈடுபட்டார் என்ற புகாரில் பிரபல கணினி கல்வி நிறுவனமான ஆப்டெக்கின் தலை வர் ராகேஷ் ஜுன்ஜுஹன்வாலா மீது செபி அமைப்பு (இந்திய பங்கு- பரிவர்த்தனை வாரியம்)விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ர வரி முதல் செப்டம்பர் வரையி லான காலகட்டத்தில், ஆப்டெக் கின் பொருளாதார விவரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பங்கு வர்த்தகத்தில் கோடிக் கணக்கான ரூபாய் லாபம் சம்பாதித் தார் என்று புகார் எழுந்தது.
இதில் ராகேஷ் ஜுன்ஜுஹன் வாலா, அவரது குடும்ப உறுப்பி னர்கள், ஆப்டெக் நிறுவனத்தின் சில இயக்குநர்கள் ஆகியோ ருக்கும் பங்கு இருப்பது குறித்த விசாரணையை செபி நடத்த வுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் ராகேஷின் சகோதரர் மற்றும் சகோதர ரின் மனைவி இருவரும் சேர்ந்து ஏழரை லட்சத்திற்கும் அதிகமான ஆப்டெக் பங்குகளை தவறான வழியில் வாங்கி 160 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் சம்பாதித்துள்ளதாக செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.