பிரஸ்ஸல்ஸ்
ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அருகே ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான பெல்ஜியம் கொரோனவால் கடும் சேதாரத்தைச் சந்தித்து வருகிறது.
தினமும் அங்குச் சராசரியாக 2000-பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பெல்ஜியத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 34,809 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4857 பேர் பலியாகியுள்ள நிலையில், 7000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலக நாடுகள் பட்டியலில் டாப் 10-க்கு முன்னேறியுள்ளது.