மியான்மரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது இதன் காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மியான்மரின் மான் மாகாணத்தில் ப்யார் கோன் கிராமத்தில், நேற்று நிலச்சரிவில் ஏற்பட்டது. அதில் சுமார் 16 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலியாகி உள்ளனர். 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக மான் மற்றும் பகோ மாகாணத்தில் 30,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.