ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது.இதனால் இந்த 2 அணைகளின் பாதுகாப்பை கருதி உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது.தற்போது கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து புதனன்று (செப். 23) நிலவரப்படி 65 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருந்தது.