tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சிமிகு நடைபயணம்

வடலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலிருந்து நவம்பர் 25 அன்று துவங்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சிமிகு நடைபயணம், 9வது நாளான டிசம்பர் 3 செவ்வாயன்று மாலை, சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தை அடைந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாதர் சங்க அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி உள்ளிட்டோர் பேசினர்.