சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான மயிலாடுதுறையின் முக்கிய நகர் பகுதியான சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சீர்காழி தாலுகா பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.