ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6ஆவது சீசனின் 60வது ஆட்டம் சென்னை ஜவ ஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வியாழ னன்று(ஜன.16) இரவு நடைபெற்றது. நார்த் ஈஸ்ட் எஃப்சி (கவுகாத்தி)அணியும் சென்னை எஃப்சியும் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு அடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. குறிப்பாக சென்னை வீரர்கள் முழு மையக ஆட்டத்தை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவேல்லாரோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அந்த ஆரவாரம் அடங்கு வதற்குள் 59 ஆவது நிமிடத்தில் வால்ஸ்கிஸ் மற்றோடு கோல் அடித்து அசத்தினார். பின்னர், இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்த நிலையில் கிடைத்த நான்கைந்து வாய்ப்புகளும் சென்னை வீரர்கள் கோலாக மாற்ற தவறினர். அதேபோல், கவுகாத்தி அணிக்கும் கிடைத்த இரண்டு வாய்ப்புகளும் கை கூடவில்லை. சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணிக்கு 4வதுவெற்றியாகும்.