நலவாரியங்களில் பதியாத ஓவியர்களுக்கும், பிற தொழில் சார்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்க ளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கிட வேண்டு மெனவும், நலவாரிய பதிவு அலுவலகங்களில் பதிவு களை தொடர்ந்திட கோரியும் ஈரோடு மாவட்ட ஓவி யர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட் டச் செயலாளர் ஸ்ரீ.ராம், மாவட்ட பொருளாளர் மாரப் பன், ஈரோடு மாவட்ட ஓவியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஜீவா, தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.