ஈரோடு, ஜன. 8- சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர்கள் எஸ்.நாராயணசாமி, எம்.என்.சிவசங்கரன் ஆகியோரின் படத்திறப்பு விழா புதனன்று ஈரோட்டில் நடைபெற்றது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் எஸ்.நாராயணசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் முதுபெரும் தலைவர் எம்.என்.சிவசங்கரன் ஆகியோரின் படத் திறப்பு விழா புதனன்று புஞ்சைபுளி யம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு புளியம்பட்டி ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ஊட்டி சுப்பு, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி பழ னிச்சாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி பி.ஆர்.முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செய லாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இந்நிகழ்வில் எஸ்.நாராயணசாமியின் படத்தை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து திறந்துவைத்தார். எம்.என்.சிவசங்கரன் படத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மின் திட்ட முன்னாள் தலைவர் ராம தாஸ் திறந்து வைத்தார். சிஐடியு மூத்த தலைவர் கே.துரை ராஜ், மின் ஊழியர் மத்திய மண்டல செயலாளர் ஜோதி மணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய நல அமைப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்து முன்னணி அராஜகம் முன்னதாக, இப்படத்திறப்பு விழா நடைபெற்ற பகு தியில் கூட்டம் நடத்தக் கூடாது எனக் கூறி இந்து முன்ன ணியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தகறாரில் ஈடுபட்டனர். மேலும், விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மற்றும் இரு சக்கர வாகனத்தின் சாவிகளை பிடுங்கி வைத்து அராஜகமான முறையில் செயல்பட்டு பதற்றத்தை உருவாக்கினர். இதையடுத்து காவல்துறையினர் தலை யிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.