tamilnadu

தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

2 பேருக்கு கத்திக்குத்து

தஞ்சாவூர், ஏப்.30-தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 12 நாட்கள் நடைபெற்ற விழாவை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு பகுதி கிராம மக்கள் சார்பாக(மண்டகப்படி) விழா நடத்தப்பட்டு வந்தது. தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்நிலையில் ஒரு கிராம இளைஞர்கள் சிலர், மற்றொரு கிராம மக்களைப் பற்றி தரக்குறைவாக தேநீர் கடையில் பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை சிலர் தட்டிக் கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ மொபைல் கடையில் இருந்த வெங்கடேஷ் என்ற ஊழியரை சிலர் திங்கள்கிழமையன்று தாக்கினராம். மேலும் மெய்யர் மற்றும் சந்திரசேகர் என்பவர்களை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த 2 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கோயில் விழா தொடர்பாக ஏற்பட்ட மோதல் மேலும் பரவாமல் தடுக்க அதிரடிப்படை காவலர்கள் கோயில் பகுதியில் குவிக்கப்பட்டனர். 


அஞ்சல் தலை கண்காட்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.30-திருச்சி தலைமை தபால் நிலையத்தில் மே 1-ம் தேதி முதல் அஞ்சல் தலை சேகரிப்பு சம்பந்தமான கோடை முகாம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களித்து மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு திருச்சி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமி நாதன் தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் திருச்சி, தஞ்சை மற்றும் திருவரங்கம் கோட்ட ங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அஞ்சல் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 


சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.30-சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க கால த்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நிரந்தர தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுற்றுலா மாளிகை அருகே உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் தண்டோரா போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பா ட்டத்திற்கு நிர்வாகிகள் சக்திவேல், சந்திரசேகரன், மகாலி ங்கம், கணேசன், கருப்பையா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநில நிர்வாகிகள் அம்சராஜ், சண்முகம் பேசினர்.