tamilnadu

img

பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்

தருமபுரி, அக். 5- அரூரை அடுத்த டி.அம்மா பேட்டையில் தெருக்களுக்கு இணைப்புச் சாலை இல்லாததால் சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், டி.அம்மாபேட்டையில் 100க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இதில், ஒரே ஒரு தெருவுக்கு மட் டும் டி.அம்மாபேட்டை- ஆண்டி யூர் செல்லும் தார்ச் சாலையில் இணைக்கும் இணைப்புச் சாலை  வசதி உள்ளது. மற்ற தெருக்களில் வசிக்கும் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான இணைப்புச் சாலை வசதி இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் இணைப் புகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொள்ள  முடியாத நிலையுள்ளது. இந்நிலையில், டி.அம்மா பேட்டையைச் சேர்ந்த கந்த சாமி என்பவரின் மனைவி மாரி யம்மாள் (75) வியாழனன்று மரண மடைந்தார். அவரது சடலத்தை எடுத்துச் செல்வதற்கான வழி இல்லாததால் டி. அம்மாபேட்டை கிராம மக்கள் பாதை வசதி ஏற் படுத்தி தர வேண்டும் என வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர்  வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டி, டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன், வட் டாட்சியர் செல்வகுமார் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் கிராம  மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதில் கிராம மக்கள் சாலை வசதி கோரும் இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த வேறொரு சமு தாய மக்களின் கோயில் இடம் மற்றும் இருவருக்கு பதியப்பட்ட இடம் உள்ளது. எனவே சாலை  வசதி ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து, இன்னும் ஓரிரு தினங்களில் டி.அம்மாபேட்டை யில் குடியிருப்பு பகுதிகளை அள வீடு (சர்வே) செய்து தெருக்களுக் கான இணைப்புச் சாலை அமைக் கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.  ஆனால், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படாததால் அரசு அதிகாரிகள் வெள்ளி யன்று இரவும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை இருவேறு சமூகத்தினர் இடையிலானது என்பதால் சமூக மோதல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காக சுமார் 50க்கு மேற்பட்ட காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.