tamilnadu

img

நிதிநிறுவனங்கள் நெருக்கடி - மாதர் சங்கம் புகார்

தருமபுரி, ஜூன் 4- தனியார் நிதிநிறுவனங்கள் பொது மக்களிடம் கடனை கட்டசொல்லி நிர் பந்திப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத் தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் ஜாஸ்மீன் ஆகியோர் மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, தருமபுரி மாவட்டத்தில் ஏழை, எளியோர் சிறுதொழில் செய்யவும், தங்களின் குடும்ப செலவுகளுக்கும் தனியார் நிதிநிறுவனங்கள் மூலம் கடன் பெற்று தவனை முறையாக கடனை திருப்பி செலுத்தி வருகின்ற னர். இச்சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் வரு வாயின்றி தவித்து வருகின்றனர். இந்நி லையில் மத்திய அரசு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவனையை வசூ லிக்க கூடாது என்று அறிவித்தது.

 ஆனால், வாங்கிய கடனுக்கான மாத தவனையை செலுத்த வேண்டும் என தனியார் நிதிநிறுவனங்கள்  நிர்பந் தித்து வருகிறது. குறிப்பாக, தருமபுரி நகராட்சி 4,5, 6,7 ஆகிய வார்டுகளில் இஸ்லாமியர் குடும்பங்கள் சிறுதொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்க ளின் குழந்தைகளின் கல்வி செலவிற் காகவும், மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுக்காக  தனியார் நிதிறுவ னங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்த தனியார் நிதிநிறுவனங்கள் வாங்கிய கடனுக்கான தவனையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகிறது. இதனால் இஸ்லா மிய பெண்கள் செய்வதறியா திகைத்து வருகின்றனர். மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தனியார் நிதிநிறுவனங்க ளின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். இஸ்லா மிய பெண்கள் சிறுதொழில் துவங்க தமி ழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.