தருமபுரி, ஜூலை 30- கடன் கேட்டு மிரட்டும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியா ழனன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி மற்றும் காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் தெரிவித்திருப்பதா வது, சுயஉதவிக்குழு பெண்களிடம் வாங்கிய கடனை உடனடியாக திருப் பித்தர வேண்டும் என பெண்களின் வீட்டின் முன்பு மிரட்டுவது, தவ றான வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயலில் நுண்நிதி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்ச லுக்கு ஆளாகின்றனர். ஆகவே, மாவட்ட ஆட்சியர் நுண்நிதி நிறுவ னங்களை அழைத்துப் பேசி கடன் கட்டச் சொல்லி மிரட்டுவதை கைவிட்டு ஏழை மக்களையும், பெண் களையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இம்மனுவினை மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்டச் செயலாளர் எஸ். கிரைஸா மேரி, நிர்வாகிகள் கே.பூபதி, கே.சுசீலா, ரங்கநாயகி, ஜாஸ்மீன் ஆகியோர் அளித்தனர்.