திருப்பூர், ஜூன் 23 – ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் கொடுத் திருந்தும், மாவட்ட நிர்வாகத்திடம் பெண் கள் தொடர்ச்சியாக புகார் அளித்தும் நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூல் நடவ டிக்கை தொடர்ந்து வருவதை எதிர்த்து திருப் பூர் மாவட்டத்தில் நூறு மையங்களில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள் ளது. இது தொடர்பாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டச் செயலா ளர் எஸ்.பவித்ரா ஆகியோர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, கொரோனா நோய்த் தொற்று காரண மாக கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அம லில் உள்ள நிலையில், அனைத்து தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர்.
இந்நிலையில், பல்வேறு நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று முறையாக செலுத்தி வந்த பெண்களால் இன்றைய சூழ்நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நி லையைக் கருத்தில் கொள்ளாமல் நுண்நிதி நிறுவனங்கள் வீடு தேடிச்சென்று பெண்க ளிடம் கடன் தொகையை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதும், கடன் செலுத்த முடியாத நிலையில் தகாத வார்த்தைகளால் பேசுவதும், மீண்டும் கடன் தர மாட்டோம், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்குக் கூட கடன் கிடைக்காது என மிரட்டுவதும், அப ராத வட்டியும் செலுத்த வேண்டும் என அச்சுறுத்துகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் பல முறை வலியுறுத்தியுள் ளது. பல்வேறு பகுதி பெண்களும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகம், காவல் அலுவலகம் என முறையிட்டு வருகின்ற னர். ஆட்சியரும் நுண்நிதி நிறுவனங்கள் கட் டாய வசூல் செய்யக் கூடாது என அறிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பல நுண்நிதி நிறுவ னங்கள், ஆட்சியரா கடன் கொடுத்தார்? அவரா எங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார் என மாவட்ட ஆட்சியரின் உத்தரவையே மதிக்காமல் அவமரியாதையுடன் பேசி வரு கின்றனர். எனவே, இம்மாதிரி நிறுவனங் கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி உத்தரவை மதிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் நூறு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்துள்ளது.