tamilnadu

img

கடலூர் பள்ளி வேன் விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு - கேட் கீப்பர் கைது

கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் தனியார் பள்ளி வேன் இன்று 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. சுமார் 8 மணி அளவில் வேன் செம்மகுப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் நிமிலேஷ் (12)மற்றும் சாருமதி (16) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தநர். செழியன் (15) மற்றும் விஷ்வேஸ் (16) ஆகிய இரு மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர்(47) கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் செழியன் என்ற மாணவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அழைத்து சென்றபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த செழியன்  சாருமதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை அடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், லேசான காயம் -அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.