அரசு மருத்துவமனையில் ஆய்வு
நாமக்கல், செப்.5- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வெள்ளி யன்று ஆய்வு செய்த நகர்மன்றத் தலைவர், நோயாளிக ளின் குறைகள் குறித்து கேட்டறிந்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம், மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், நோயாளிகளின் குறைகள் குறித்தும் நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன் கேட்டறிந்தார். மேலும், மருத்துவ மனையில் பொதுமக்களின் வசதிக்காக கட்டப்படும் கழிப்பி டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, தாமதமின்றி பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ் வில், தலைமை மருத்துவ அலுவலர் பாரதி, நகர பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜ்குமார், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், இளைஞரணி அமைப்பா ளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.