தனியார் பள்ளியில் விளையாட்டு விழா
திருப்பூர், மார்ச் 1- திருப்பூர் விஜயபுரம் கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடைபெற்றது. திருப்பூர், காங்கேயம் சாலை, விஜயாபுரம், புண்ணிய வதி சாலையில் அமைந்துள்ள கிட்ஸ் கிளப் (சி.பி.எஸ்.இ) முதுநிலைப் பள்ளியின் விளையாட்டு தின விழா பள்ளி விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தலைமை வகித்தார். தாளாளர் வினோதினி கார்த்திக் முன்னிலை வகித்தார். பள்ளியின் மாணவர் தலை வர் தருண் குமார் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத்தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, விளையாட்டு தின விழா துவக்கியது. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை ஓட்டம் மற்றும் சிறார்களுக்கான சாக்குப்போட்டி, பெற்றோர்களுக்கான தொடர் ஓட்டம் மற்றும் நடையோட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவிகளும், டென்னிஸ் போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை தியா தர்ஷினி, மாநில அளவில் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீராங் கனை கெவீனா சஞ்சீவ் ஆகியோரும், இப்பள்ளித் தலைவர் கார்த்திக் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். முடிவில், மாணவர் தலைவர் ரித்திகா நன்றி கூறினார்.
