மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் விற்பனை எச்சரிக்கையை மீறிய கடைக்கு அதிரடி சீல்
கோவை, பிப்.21- வெள்ளியங்கிரி மலை அடிவாரத் தில், தடை செய்யப்பட்ட நெகிழி (Plastic) பொருட்களைப் பயன்படுத்தி வந்த கடைக்கு அதிகாரிகள் வெள்ளி யன்று சீல் வைத்தனர். மகா சிவராத்திரி மற்றும் மே மாதம் வரையிலான கோடை காலத்தை முன் னிட்டு, வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆயிரக் கணக்கானனோர் தற்போது கோவை யிலுள்ள வெள்ளியங்கிரி மலையேறி வருகின்றனர். இந்நிலையில், அடி வாரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன் பாடு அதிகரிப்பதாக எழுந்த புகார் களை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில், கண் காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட் டன. முன்னதாக, பிளாஸ்டிக் கவர் களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து நோட் டீஸ் வழங்கியிருந்தனர். இருப்பினும், அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அடிவாரத்தில் உள்ள சில கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையொட்டி சனியன்று நடைபெற்ற திடீர் சோதனை யின் போது, பிளாஸ்டிக் பொருட் களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மலைப் பகுதியில் வீசப்படும் நெகி ழிப் பொருட்கள் வன விலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, மண்ணின் வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்பதால், பிளாஸ்டிக் குவியலைத் தடுக்க இனி வரும் நாட்க ளிலும் இத்தகைய கடுமையான நடவ டிக்கைகள் தொடரும் என அதிகாரி கள் எச்சரித்துள்ளனர். மேலும், வெள்ளி யங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எக் காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாட் டில்கள் மற்றும் பைகளை எடுத்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
