tamilnadu

img

‘இந்தி’யில் ஊர் பெயர்கள் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

‘இந்தி’யில் ஊர் பெயர்கள் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 1- ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊர் பெயர்கள்  எழுதப்பட்டுள்ளதை கண்டித்து கோவையில் மே 17 இயக்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழி யில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டித்து மே 17  இயக்கத்தினர் ஞாயிறன்று கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், முற்போக்கு இயக்கங்களை  சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழிக்கு ஆதரவாக வும் இந்தி மொழி திணிப்பிற்கு  எதிராகவும் கண்டன பதாகை களை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய ராமகிருட்டிணன், ஒன்றிய அரசு தொடர்ந்து  தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணித்து வருகிறது. இரு மொழிக் கொள்கை உள்ள மாநிலங்களின் மீது பாஜக அரசு  போர் தொடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற தேசிய ஜன நாயக கூட்டணி நிகழ்வில் பெரியாரின் புகைப்படம் இடம் பெற்று, பின்னர் அகற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு, மோடி நடத்தும் நிகழ்வில் பெரியார் படம் இல்லாமல் இருப் பதே சிறப்பு. அதிமுக நிகழ்வாக இருந்து பெரியார் படம் நீக்கப் பட்டு இருந்தால் கண்டித்திருப்போம். ஆனால், பாஜக நடத் தும் நிகழ்வில் பெரியார் படம் வைத்து, அவர்கள் பெரி யாரை ஏற்றுக் கொண்டார்கள் என்று நடித்தால் அது தமிழ் நாட்டிற்கு ஆபத்து, என்றார்.