மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.18 % போனஸ், 5 % ஊதிய உயர்வு உடன்பாடு
திருப்பூர், அக். 10 - திருப்பூர் மாவட்டம் மங்க லம் பகுதி விசைத்தறித் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கூலி உயர்வு ஒப்பந்தப் பேச்சு வார்த்தை சுல்தான்பேட்டை அம்மன் கலையரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்ற னர். இதில் நடப்பு 2025ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கூலி உயர்வு சம்பந்தமாக பேசப்பட்டு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. 2025ஆம் ஆண்டுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் 13.18 சதவிகிதம் வழங்குவதென்று உடன்பாடு ஏற்பட்டது. அத்துடன், அனைத்து ரகங்களுக்கும் 2022ஆம் ஆண்டில் நடை முறையில் இருந்த கூலியில் இருந்து 5 சதவீ தம் கூலி உயர்வு வழங்குவதென்றும் ஒப்பந் தம் ஏற்பட்டது. விசைத்தறி உரிமையாளர் சங்கச் செயலா ளர் எம்.பழனிச்சாமி, தலைவர் ஆர்.கோபால், ஏ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தொழிற்சங்கத் தரப்பில் ஏடிபி சார்பில் மங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலா ளர் பி.முத்துசாமி, மாவட்டத் தலைவர் வேலுச் சாமி, ஐஎன்டியுசி எம்.நடராஜ், எல்பிஎப் சிவ சாமி, ஐஎன்டியுசி ஆ.சபாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.