கோவை மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர தீர்த்தம் மூலம் இறந்த வாக்காளர்கள் உட்பட 5 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உட்பட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கிட்டு படிவங்களை வழங்கும் பணியில் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். தற்பொழுது வாக்காளர்கள் இடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீடு படிவங்களை பெற்று, அதனை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர தீர்த்தம் மூலம் இறந்த வாக்காளர்கள் உட்பட 5 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதில், இறந்த வாக்காளர்கள் 1,13,861 பேர் மற்றும் சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 3,92,533 பேர் என மொத்தம் 5,06,394 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். செய்யப்பட்டுள்ளனர்.
