tamilnadu

சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

உதகை, நவ.23- உதகை நகரில் உள்ள பிரதான சாலைகளில் சுற்றித்திரி யும் நாய்களால் சுற்றுலா பயணிகள், குழந்தைகள் அச்ச மடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை நகரின் முக்கிய நுழைவுப் பாதைகளிலும், நகர் பகுதியின் பிரதான சாலையான கமர்ஷியல் சாலையில் தினமும் பெருமளவிலான வாகனங் கள் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலையில் நாய்கள் சுற்றுவததோடு மட்டுமல்லாமல், சில  நேரங்களில் குழுவாக சண்டையிட்டு சாலையைக் கடந்து ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி  கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மேலும், அவ்வப்போது மக்களை நாய்கள் கடிக்க வருவதைப் போன்று துரத்துகின்றன. எனவே விபத்துகளுக்கு காரண மாக இருக்கும் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத் தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், சுற்றுலாப்  பயணிகளும் நகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.