அமராவதி சர்க்கரை ஆலையை வல்லுனர் குழுவினர் ஆய்வு
உடுமலை, அக்.10- அமராவதி சர்க்கரை ஆலையை புனர மைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து வெள்ளியன்று வல்லுனர் குழுவி னர் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1962 ஆம் ஆண்டு, தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக நிறுவப்பட்டது. ஏறத் தாழ 60 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிய இந்த ஆலை, தற்போது பழைய தொழில்நுட்பம் காரணமாக பழுதடைந்து அரவை நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்டு வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆலையை நவீனமாக புனரமைத்து மீண் டும் அரவையை துவங்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடும லைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமராவதி சர்க்கரை ஆலையை வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து புனரமைக் கப்படும் என அறிவித்தார். அதன்படி சனி யன்று தமிழக சர்க்கரைத் துறை இயக்குனர் அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு சர்க் கரை துறை வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சி யாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் மிகவும் பழமையான இந்த ஆலை சுமார் ரூ.100 கோடி செலவில் புனரமைக்க வேண்டும் என அதிகாரிகளும் விவசாயிக ளும் தெரிவித்தனர். இதை முழுவதும் ஆய்வு செய்த இயக்குனர், இந்த கருத்தை முதல்வ ரிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இது குறித்து தமிழக கரும்பு விவசாயி கள் சங்க செயலாளர் எம்.எம்.வீரப்பன் கூறு கையில், தமிழகத்தில் கரும்பு சீசன் நிறை வடைந்த பிறகும் சீசன் அல்லாத நேரத்திலும் கரும்பு வரத்து வரக்கூடிய ஒரே ஆலை இந்த ஆலை தான். ஆண்டுக்கு பத்து மாதங்கள் கரும்பு வரும் ஒரே ஆலை இதுதான். மேலும், அமராவதி மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளின் நீரைக் கொண்டு ஆயிரக்கணக் கான ஏக்கர் கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு 10.5 அளவுக்கு பிழிதிறன் கொண்ட தரமான கரும்புகள் இங்கு விளை வதாக தெரிவித்தனர். எனவே ஆயிரக்கணக் கான விவசாயிகளின் எதிர்கால நலனை கருத் தில் கொண்டு இந்த ஆலை விரைவில் புனர மைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த னர்.