tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல், செப்.1- நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதந் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் குறை தீர் கூட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்குட் பட்ட கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடத் தப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற் கான குறைதீர்க்கும் முகாம் செப்.3 ஆம் தேதி (நாளை) நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.10 ஆம் தேதி பரமத்திவேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.17 ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.20 ஆம்  தேதி பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவல கத்திலும், செப்.24 ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியா ளர் அலுவலகத்திலும் காலை 11:00 மணிக்கு நடை பெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து

சேலம், செப்.1- ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். சேலத்திலிருந்து அரசு பேருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாதையில் 16 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவேந் திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்த னர். ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து  அரசு பேருந்து ஓட்டுநர் கோபால் (39), நடத்துநர் சக்தி வேல் (50) ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ரயிலில் திருட்டு: ஒருவர் கைது

தருமபுரி, செப்.1- தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்ப மரத்து கொட்டாய், சக்தி நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்த வர் ஆ.செந்தில்வேலன். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த  மாதம் தருமபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் பயணி கள் ரயிலில் சென்றபோது, அவரது கைப்பேசி திருடுபோ னது. இதுகுறித்து தருமபுரி ரயில்வே காவல் நிலையத் தில் புகாரளித்தார். இந்நிலையில், சனியன்று ரயில் நிலை யத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏறு பள்ளி, இந்திரா காலனியைச் சேர்ந்த ச.அன்புமணி  என்பதும், பெங்களூரு சென்ற ரயிலில் செந்தில்வேல னின் கைப்பேசியை திருடியதும் தெரியவந்தது. இதைய டுத்து அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன் றத்தில் நேர்நிறுத்தினர்.

மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம்

சேலம், செப்.1- சந்துக்கடைகளில் பறிமுதல் செய்த மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலை யத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வர் பிரசாந்த். இவர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது புகாருக் குள்ளானதால், மேட்டூருக்கு பணியிட மாற் றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மேட்டூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றது முதல் இவர் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வந்தார். இந்நிலையில், மேட்டூா் காவேரி கிராஸ் பகு தியில் ராஜா என்பவரிடமிருந்து சுமார் 300 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த இவர், ஆவணத்தில் காட்டிவிட்டு மற்ற மதுபாட்டில் களை தனது உறவினர்களின் சந்துக்கடை யில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும், இதுகுறித்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலுக்கு சென்ற நிலையில், பிரசாந்த்தை சேலம் ஆயு தப்படைக்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.

கல்லூரி மாணவர் படுகொலை: 2 சிறுவர்கள் கைது

நாமக்கல், செப்.1- நாமக்கலில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர் புடைய 2 சிறுவர்களை காவல் துறை யினர் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். நாமக்கல், முல்லை நகர் பகுதி யில் வெள்ளியன்று கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற வர்கள் கண்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நாமக் கல் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தது நாமக்கல், கொண் டிச்செட்டிப்பட்டி, கணபதி நகர் நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்ப ரின் மகன் மனோ (19) என்பதும், தனியார்  கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து  வந்ததும் தெரியவந்தது. இதுதொடர் பாக 3 தடைப்படைகள் அமைத்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வந்த னர். மனோவின் கைப்பேசியில் இறுதி யாக பதிவான அழைப்புகளைக் கொண் டும், அப்பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை கொண்டும் விசாரணை நடை பெற்றது. இதில், மனோ கொலையா வதற்கு முன்பு இருசக்கர வாகனத்தில்  அவரை இருவர் அழைத்துச் சென்றது  தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த தில், மனோ வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த லாரி பட்ட றையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அந்த இருவரையும் பிடித்து விசா ரித்தபோது, அவர்களில் ஒருவரின் சகோ தரியை, மனோ கிண்டல் செய்ததாக வும், ஏற்கெனவே கொடுத்த ரூ.3,500 பணத்தை கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த இருவரும் மனோவை தனி யாக அழைத்துச் சென்று கொலை  செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து தப்பித்து திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந் தது. இதையடுத்து போலீசார் இருவரை யும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

3 வயது சிறுவன் சடலம் மீட்பு

சேலம், செப்.1- சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியிலுள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகிலுள்ள மின்மாற்றியின் கீழ்  பகுதியில் 3 வயது சிறுவன் ஞாயிறன்று காலை மயக்க நிலையில் கிடந்தார். இதையறிந்த அவ்வழியாக சென்ற வர்கள், சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில், அங்கு வந்து போலீசார், சிறு வனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரிழந்து பலமணி நேரம் ஆகிவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, உயிரிழந்த சிறுவன் குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமுஎகச மாநாடு

நாமக்கல், செப்.1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஐந்துபனை கிளை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீ.சேக ரன் துவக்கவுரையாற்றி னார். இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற இம்மாநாட்டில், கிளைத் தலைவராக என்.ரேவந்த், செயலாளராக பி. ராஜ்குமார், பொருளாளராக என்.அண்ணாமலை, துணைத் தலைவராக பி.மீனா, துணைச் செயலாளராக வி.எம்.கார் பிக் ராய் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.