tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசு முகாமில், மரம் விழுந்து மூதாட்டி படுகாயம்

சேலம், அக்.19- ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமிற்கு  சென்ற மூதாட்டி மீது மரம் விழுந்து படுகாயமடைந்த தால், உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், கீரிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ  முகாம் சனியன்று நடைபெற்றது. இம்முகாமில் கீழ்த் தொம்பை பகுதியைச் சேர்ந்த லட்சுமி (60) என்பவர்  சிகிச்சைக்காக சென்றுள்ளார். மரத்தடியில் காத்திருந்த  நிலையில், அருகிலிருந்த மரத்தின் கிளை லட்சுமியின் தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடி யாக கீரிப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக் காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டார். தொடர்ந்து, லட்சுமிக்கு அதிக மூச்சுத்திண றல் இருந்ததை தொடர்ந்து, சேலம் அரசு மோகன்  குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், வயதான காலத்தில் தொடர்ந்து அவர் பணி செய் வது கேள்விக்குறியாக உள்ளது எனவும், அரசு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள் ளதால் அரசு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை 

விபத்தை தடுக்க மேம்பாலத்தில் வேகத்தடை

கோவை, அக்.19- விபத்தை தடுக்க ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் இறங் கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை - அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப் பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் சிலர்  100 கிலோ மீட்டர் வேகத்தை கடந்து செல்வதால், பாலத் தில் செல்லும் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. சில  நாட்களுக்கு முன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரில்  சென்ற மூவர் கோல்டுவின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலே மூன்று  பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மேம்பாலத் தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்ப டுத்த கோரிக்கை எழுந்தது. இதற்காக உப்பிலிபாளை யம், கோல்டுவின்ஸ் மற்றும் சுகுணா கல்யாண மண்ட பம் ஜி.டி மியூசியம் காலேஜ், அரவிந்த் கண் மருத்துவ மனை இறங்கு தளம் என ஆறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்திலிருந்து இறங் கும் பகுதிகளில் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டக்கூடாது என்றும், வேகத்தடை உள்ள தால் மெதுவாகச் செல்லவும் என்று எச்சரிக்கை பலகை கள் வைக்கப்பட்டுள்ளன. வேகத்தை கண்காணிக்க ஏ.ஐ  கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் மோதி முதியவர் பலி

கோவை, அக்.19- மதுக்கரை எல்அன்ட்டி நெடுஞ்சாலையில் கார் மோதியதில், சாலையை கடக்க முயன்ற முதியவர் ஞாயி றன்று உயிரிழந்தார். கோவை, மதுக்கரையை அடுத்த வழுக்கப்பாறை, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள்  (70). கூலி வேலை செய்து வந்த இவர், ஞாயிறன்று  காலை சேலம் – கொச்சின் எல்அன்ட்டி நெடுஞ்சாலை யில் தேநீர் குடிக்க நடந்து வந்தார். அப்போது கடைக்கு  செல்வதற்காக பெருமாள் சாலையை கடக்க முயன்ற போது, கேரளா நோக்கி அதிவேகமாக சென்ற கார்  கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்ட பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதனிடையே, பெருமாளின் மகள் சுமதி மதுக் கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விபத்து ஏற்படுத்திய கேரளா மாநிலம், கோழிக் கோட்டை சேர்ந்த கோகுல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.