அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி, விசிக ஆட்சேபம்
திருப்பூர் மாவட்டத்தில் சாலை யோரம் அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்றுவது தொடர் பாக மாவட்ட நிர்வாகம் நடத்திய கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி ஆகியவை ஆட்சேபம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள அர சியல் கட்சிகளின் கொடிக் கம்பங் களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து தமிழ் நாடு அரசு இதற்கான மேல் நடவ டிக்கையை தொடங்கியுள்ளது. இதன்தொடர்ச்சியாக, திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம் பங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதி களை அழைத்திருந்தது. இக்கூட் டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிக ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். இதில் பேசிய அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நெடுஞ் சாலை ஓரங்களில் அரசியல் கட்சிக ளின் கொடி கம்பங்களை எடுக்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சி யினர் ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்று கூறினர். இக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பா. சௌந்தரராசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.சிகாமணி இப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாட்டைத் தெரிவித்த னர். ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாச னம் வழங்கியுள்ள அடிப்படை உரி மைக்கு எதிரானது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சியும் இத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளது. பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத் தும் மற்றும் பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள கொடி கம்பங் களை அகற்றுவதில் தவறில்லை. எனினும் அரசியல் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் பாதுகாப்பான முறையில், மக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டிருக் கும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை எடுப்பதற்கு ஆட்சே பனையை கூட்டத்தில் பதிவு செய்த னர். அதேபோல் இக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை எடுப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் முழுமையாக அரசு நிர்வாகம் அம லாக்குகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக, அதிமுக கட்சியினர் கூறு கையில் கொடி கம்பங்களை அகற் றுவதில் ஒத்துழைப்பு தருவதாக வும், காவல் துறையினர் உரிய பாது காப்புடன் சம்பந்தப்பட்ட கட்சிக ளுக்கு முன்னதாகத் தகவல் தெரி வித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித் தனர்.