திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருப்பூர், அக். 10 - திருப்பூர் மாநகராட்சி யில் பணி செய்யும் வாகன ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் ஊதிய உயர்வு, போனஸ் கோரி வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி கருவம்பாளையம் மாட் டுக்கொட்டகை வளாகத்தில் வெள்ளி யன்று காலை தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் ஊதிய உயர்வு, போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநக ராட்சி ஆணையர் எம்.பி. அமித் அங்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினார். எனினும் தீர்வு காணப்படவில்லை. திருப்பூர் மண்டலங்களில் வேலை செய் யக்கூடிய ஊழியர்களும் வேலை நிறுத்தத் தில் கலந்து கொண்டனர். சிஐடியு தலைமை யில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலா ளர்களின் கோரிக்கைகள் குறித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநகர மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் எம்.பி.அமித், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரம ணியம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் கள், காவல் துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற் காத வரை போராட்டம் தொடரும் என்று சிஐ டியு சார்பில் உறுதியாகத் தெரிவித்தனர். தீர்வு காணப்படாத நிலையில் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. சனி யன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.