கோவை விமான நிலையம் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 02ஆம் தேதியன்று கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (30), காளீஸ்வரன் (28), குணா (25) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் நடந்த விசாரணையில் அதே தினத்தன்று அவர்கள் 3 பேரும் முதியவர் ஒருவரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மாண்வியிடம் நடந்த விசாரணைக்கு பிறகு 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
