india

img

'சஞ்சார் சாத்தி' செயலி விவகாரம் - பின்வாங்கிய ஒன்றிய அரசு!

அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு.
இந்தியாவில் விற்பனைக்கு உள்ள அனைத்து மொபைல் போன்களிலும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக 90 நாட்களுக்குள் 'சஞ்சார் சாத்தி' செயலி இடம் பெற வேண்டும் எனவும், அதனை யாரும் un-install செய்யாத வகையில் இருக்க வேண்டும் எனவும் அனைத்து மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டிருந்தது. 
இதை தொடர்ந்த, சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலியை நிறுவ வேண்டும் என்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவங்களுக்கு வழங்கிய உத்தரவை திரும்பப் பெறுவதாக ஒன்றிய தொலைத்தொடர்பு துறை இன்று அறிவித்துள்ளது.