headlines

img

உழவர்க்கு உடன் உதவுக!

உழவர்க்கு உடன் உதவுக!

‘மழை கெடுத்தது பாதி மத்திய அரசு கெடுத்தது மீதி’ என்று கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு நெல் கொள்முதல் ஈரப்பத அளவில் நடந்ததால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழக முதல்வர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்கள் எழுதியும் கூட நெல் ஈரப்பத அளவை 22 சதவீத மாக உயர்த்தி அறிவிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்து கோவையில் தமிழக விவசாயிகளை பாராட்டியும் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்குமாறு உபதேசம் செய்தும் சென்றார் பிரதமர் மோடி.

இப்போது டிட்வா புயல் கடலோர மாவட்ட விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்க ளில் 6 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள் ளது. மற்ற மாவட்டங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பலத்த சேதமடைந்தன. எனவே உயிரிழப்புகளும் பயிரிழப்பு, இதரவை யும் கணக்கீடு செய்யப்பட வேண்டும். திங்க ளன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர்கள் இழப்பீட்டை விரைந்து  வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபரில் பெய்த மழை பாதிப்புக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவா ரணம் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

வெள்ள நீர் வெளியேற்றம், தாழ்வான பகுதி மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கல் போன்றவை தமிழக அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையும் பாதிப்பு அளவைக் குறைத்திருக்கி றது. என்றாலும் கால்வாய்கள் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற நடவ டிக்கைகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டி ருந்தால் தற்போதைய பாதிப்புகள் இன்னும் குறைந்திருக்கும்.

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நடவு நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், விதைப்பு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களு க்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வா கங்கள் துரிதமாகச் செயல்பட்டு கணக்கெ டுப்பை முடித்திட வேண்டும். அதுவே பாதிக்கப் பட்ட மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கும் தமிழக அரசு, உழவர்களின் கண் ணீரைத் துடைத்திட விரைந்து செயல்பட வேண்டும். “காலத்தினால் செய்த நன்றி சிறிதெ னினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்றார் திருவள்ளுவர். எனவே “உழவினார் கைமடங்க விடாது” தமிழக அரசு உதவிட வேண்டும். தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்கிட வேண்டும்.