ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில், போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 28 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனுக்கு எதிராகவும், ரஷியாவுக்கு சாதகமாகவும் இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், அமெரிக்காவின் 28 அம்ச திட்டத்தில் பல மாற்றங்களை ஐரோப்பிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.
இந்நிலையில், மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து புதின் பேசுகையில்,
ரஷ்யா ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் ஐரோப்பா நாடுகள் 28 அம்ச திட்டத்தில் திருத்தங்களை தெரிவித்து அமைதிப் பேச்சுவார்த்தையை தடுக்க முயற்சி செய்கின்றன என குற்றம்சாட்டிய புதின், ஐரோப்பிய நாடுகளுடன் போருக்குச் செல்ல நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் விரும்பினால், போரைத் தொடங்கினால், நாங்களும் தயாராக இருக்கிறோம் என ரஷ்ய ஜனாதிபதி புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
