world

இலங்கை வெள்ளப் பாதிப்புக்கு சீனா நிவாரண உதவி

இலங்கை வெள்ளப் பாதிப்புக்கு சீனா நிவாரண உதவி

கொழும்பு,டிச.2- டிட்வா புயலின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பலியான வர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 14 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சீனா அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. சீனத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சுமார் 89,80,000 ரூபாய் (1,00,000 அமெரிக்க டாலர்கள்)   சீனச் செஞ்சிலு வைச் சங்கம் அவசர கால நிதி  உதவியாக வழங்கி யுள்ளது.  அதேபோல இலங்கையில் உள்ள சீன வணிக நிறுவனங்கள் நிவாரண நிதிக்காக ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் சீன வர்த்தக சம்மேளனம், வெளிநாட்டு சீன சங்கம் ஆகியவை நன்கொடைக்கான  முயற்சிகளை ஆரம்பித்துள்ளன. இதுவரை 29 லட்சத்து 20 ஆயிரம்  ரூபாய் (32,500 அமெரிக்க டாலர்கள்) இவ்வமைப்புகள் திரட்டியுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக இதுவரை  233,015 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 1,441 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி  கோரிக்கை நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி களுக்கு அனைத்து நாடுகளும் அமைப்புகளும்   உதவி வழங்க முன்வர வேண்டும்.நட்பு நாடுகள், வெளி நாடு வாழ் இலங்கைத் தமிழர்களின் ஆதரவை எதிர்பார்ப்ப தாகவும்  இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க நவம்பர் 30 ஞாயிறன்று அழைப்பு விடுத்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.