உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 3) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1992ஆம் ஆண்டு ஐநா சபையின் மூலம் சர்வதேச மாற்ருத்திறனாளிகள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறுது.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்கிற சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்துவதும் இந்த தினத்தின் முக்கியப் பணியாகும்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநிலச்செயலாள்ர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
