tamilnadu

img

தமிழகத்தின் மதநல்லிணக்கப் பாரம்பரியத்தைச் சீர்குலைக்க முயற்சி திருப்பரங்குன்றத்தை வன்முறைக் கும்பலிடமிருந்து பாதுகாப்போம்!

தமிழகத்தின் மதநல்லிணக்கப் பாரம்பரியத்தைச் சீர்குலைக்க முயற்சி திருப்பரங்குன்றத்தை வன்முறைக் கும்பலிடமிருந்து பாதுகாப்போம்!

அரசியல் கட்சிகள், சமூக-பண்பாட்டு இயக்கங்களுக்கு சிபிஎம் அறைகூவல்

புதுக்கோட்டை, டிச. 2 -  திருப்பரங்குன்றம் வழிபாட்டுத் தலத்தை வன்முறைக் கும்பலிட மிருந்து பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக, பண்பாட்டு இயக்கங்களும் உறுதி யேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 2 நாள் கூட்டம் புதுக்கோட்டையில், செவ்வா ய்க்கிழமை (டிச. 2) அன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் துவங்கி நடை பெற்று வருகிறது.

அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், மாநில செய லாளர் பெ. சண்முகம், மத்திய கட்டுப் பாட்டுக்குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி உள் ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கலவரத் தீ மூட்டுவதையே தொழிலாக்கிய கூட்டம்! மக்களின் நம்பிக்கையை பகை உணர்வாக மாற்றி அரசியல் நோக்கத் திற்காக பயன்படுத்துவதை, இந்துத்து வா மதவெறிக் கூட்டம் சமீப ஆண்டு களில் ஒரு தொடர் தொழிலாகவே செய்து வருகின்றது.

அதன் தொடர்ச் சியாகவே, கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இது வரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி,  மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அர சியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம், இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது. 2 நீதிபதிகள் வழங்கியதற்கு நேரெதிராக தனி நீதிபதி தீர்ப்பு திருப்பரங்குன்றத்தில் கார்த்தி கைத் தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை.

தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடை முறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதி மன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் ‘இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்” என்று தீர்ப்ப ளித்துள்ளார். ஏற்கெனவே, உச்சிப் பிள்ளையார்கோவில் அருகில் தீபம் ஏற்றிவரும் நிலையில், ‘இந்த ஆண்டு முதல்’ என்று கூறியிருப்பதில் இருந்தே, இதுவரையிலும் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப் படவே இல்லை என்பது தெளிவாகிறது. பக்தியை பகடைக்காயாக்கி அரசியல் லாபமடைய திட்டம் திருப்பரங்குன்றம் சார்ந்த இவர்களின் உத்தி புதிதல்ல. மத வெறிக் கூட்டத்தின் வாடிக்கையான விஷம் தோய்ந்த உத்திதான் இது.

பல்வேறு இடங்களில் வழிபாட்டுத் தலத்தை முன்னிறுத்தி, மக்களின் பக்தி  மற்றும் மத நம்பிக்கையை மூலப் பொருளாக்கி அரசியல் லாபம் அடைந்துள்ளனர். அதையே, தமிழ கத்தில் நடத்திப் பார்க்க முனைந்துள்ள னர். எனவே, நடப்பது வெறும் தீபம் ஏற்றுவது குறித்த பிரச்சனை அல்ல; ஆழமான அரசியல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. மோதலைத் துவக்கி வைத்த அவசர கதியிலான உத்தரவுகள் இது மக்கள் நம்பிக்கை மற்றும் வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழி பாட்டுத் தலங்களை முன்வைத்து மக்க ளிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி.

பாபர் மசூதி உள்ளிட்ட பிரச்ச னைகளிலும் மோதலுக்கு வழி வகுக்கும் இத்தகைய முடிவுகளை நீதி மன்றமோ நிர்வாகத்தின் ஒரு பகுதியோ தான் முதலில் துவக்கி வைத்தது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, இந்தத் தீர்ப்பு சமய வழிபாடு சார்ந்து நல்லெண்ணத்தோடு வழங்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதவில்லை. அந்த வகை யில், இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. மதநல்லிணக்கத்தை சிதைக்க துணைபோகும் தீர்ப்பு! மதநல்லிணக்கத்திற்கு நல்ல தொரு உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது. இதைச் சிதைப்ப தன் மூலம் தொடர்ந்து மோதலும், பகைமையும் உருவாக்கப் பட்டு, அதன்மூலம் தாங்கள் அரசியல் அறுவடை செய்ய முடியும் என்று கருதுகின்ற இந்துத்துவா கூட்டத்திற்கு வாய்ப்பை அளிப்பதாக தீர்ப்பு உள்ளது.  

இந்தக் கூட்டம் இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, சமூக ஒற்றுமை, நிலச் சீர்திருத்தம், மாநில உரிமை கள், மக்கள் நலன் உள்ளிட்டு  எந்த ஒரு முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்யாத அதே  சமயம், இவற்றுக்கு எதி ராகவே நின்று வந்திருக் கிறது என்பதை தமிழ்நாடு அறியும்.  ஆனால், இவர்களுக்கு உதவும் வகையிலேயே இத் தீர்ப்பு அமைந்திருப்பது தற் செயலானது என்று கருத முடியாது. இந்த தீர்ப்பு நல்ல  நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப் பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு  அமல்படுத்தக் கூடாது.  உரியமுறையில் இந்த  தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தமிழக  அரசை வலியுறுத்துகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற மகத்தான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் முற் போக்குத் தமிழ் மரபின் பாது காவலர்களாகிய தமிழ் நாட்டு மக்கள், வழக்கம்போல மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.  கலவரத் திட்டங்களுக்கு  இரையாகக் கூடாது. பகை மையையும், கலவரத்தை யும் தூண்டும் நபர்களையும் அமைப்புகளையும் முற்றி லும் புறக்கணிக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

அராஜக கும்பலை ஒன்றுபட்டு முறியடிப்போம்! தமிழ்நாட்டில் ஒரு நிரந்த ரமான பகைமைச் சூழலை உருவாக்க முயற்சிக்கும் அராஜகக் கும்பலின் தூண்டுதலுக்கு எதிராக அனைத்து அரசியல், சமூக - பண்பாட்டு இயக்கங்களும்  உறுதியாக நிற்க வேண்டும். மக்களின் ஒற்றுமை பாது காக்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பெ. சண் முகம் கூறினார். பேட்டியின் போது கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமு வேல்ராஜ், என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோயில் நிர்வாகம் மேல்முறையீடு!

உயர் நீதிமன்ற தனி  நீதிபதிஜி.ஆர்.  சுவாமிநாதனின் தீர்ப்பை  எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர்  சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்மு றையீடு செய்துள்ளார். அதில், இந்த மேல்முறை யீட்டு மனுவை உடனடி யாக விசாரித்து, டிசம்பர் 3  ஆம் தேதி காலை 12 மணிக் குள் தீர்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.