எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
ஏழைகள், சிறுபான்மையினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் திட்டத்துடன், அவசர கதியில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்துவதற்கு மோடி அரசு மறுத்து விட்டதால், செவ்வாயன்று 2-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
