tamilnadu

img

‘நவபாசிசம் ஒழியட்டும்; நம் தேசம் சிவக்கட்டும்’ புதுக்கோட்டையில் எம்.ஏ.பேபி அரசியல் கருத்துரை

நவபாசிசம் ஒழியட்டும்; நம் தேசம் சிவக்கட்டும் புதுக்கோட்டையில் எம்.ஏ.பேபி அரசியல் கருத்துரை  

புதுக்கோட்டை, டிச. 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு சார்பில், ‘நவபாசிசம் ஒழியட்டும்; நம் தேசம் சிவக்கட்டும்’ என்ற தலைப்பில் அரசியல் விளக்கக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலா ளர் எஸ். சங்கர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் அ. மணவாளன் வரவேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மூத்த தலைவர்கள் என். சீனிவாசன், பெரி. குமாரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், ஏ. ராமையன்,  ஏ. ஸ்ரீதர், கே. சண்முகம், ஜி. நாகராஜன், த. அன் பழகன், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனார்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன் நன்றி கூறினார்.