இன்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலிவுழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
